ஒரே டிக்கெட்டில் பேருந்து, ரெயில், மெட்ரோவில் பயணிக்க முடியும்... தலைநகர் சென்னையில் விரைவில் அறிமுகம் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தகவல்
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்தநிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான இறுதி கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஒரே டிக்கெட் முறையை சென்னையில் நடைமுறைபடுத்துவதற்காக மத்திய அரசின் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்யூட்டிங்) நிறுவனத்துடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி ஒரே டிக்கெட் முறை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments