புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட கல்லூரி அமைக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய சட்ட கல்லூரி அமைத்து தருமாறு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர், மனிதநேய  ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் மற்றும் வழக்கறிஞர்களும் பொதுமக்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட மாவட்டமாக உள்ளது. கிராமப்புற மாணவர்கள் சட்டம் பயில வேறு மாவட்டங்களை தேடி போகும் நிலை உள்ளது. வருடந்தோரும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த மாணவர்களுக்கு சுயவருமானம் மற்றும் அரசு பணி சார்ந்த சட்டம் பயில ஒரு சட்ட கல்லூரியை  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பா.வரதராஜன் மற்றும் வழக்கறிஞர் முகம்மது சுல்தான் ஆகியோர்  கேட்டுக்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு அரசு சட்ட கல்லூயை அமைக்கவேண்டும் குறிப்பாக  சட்ட கல்லூரியை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அமைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். காரணம், புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது நகராட்சியாகவும் மாவட்டத்தின் பெரிய ஒன்றியமாகவும் இருக்கும் அறந்தாங்கி பெரும் மக்கள் தொகை கொண்ட சட்டமன்ற தொகுதியாகும். அறந்தாங்கி தொகுதியில் சட்ட கல்லூரி அமைக்கப்பட்டால் தஞ்சையின் மேற்க்கு பகுதியும் இராமநாதபுரத்தின் கிழக்கு பகுதியும் சேர்ந்து பயனடையும் எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு புதிய அரசு சட்ட கல்லூயை அறந்தாங்கியில் அமைக்கவேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி கேட்டுக்கொண்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments