அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் வசதி ஏற்படுத்த தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோாிக்கை
அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சமுதாய விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தி போதையில்லா தமிழகம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக ஸ்கேன் வசதியை ஏற்படுத்த வேண்டும். மணமேல்குடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி ஏற்படுத்த வேண்டும். அம்மாபட்டினம் தெருக்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments