செகந்திராபாத் (ஹைதராபாத்) - இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு





திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் செகந்திராபாத் (ஹைதராபாத்) - இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை , ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.




செகந்திராபாத் - இராமநாதபுரம் 

செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 07695) மார்ச் ‌01ம்தேதி முதல் ஜூன் 08ம் தேதி வரை 
இயக்கப்பட உள்ளது

வாராந்திர  சிறப்பு ரயில்  புதன்கிழமை தோறும் இரவு 09.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து  திருவாரூர், திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி,  வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு இராமநாதபுரம் சென்றடையும்.

இராமநாதபுரம் - செகந்திராபாத் 

இதைப்போல மறுமார்க்கத்தில் இராமநாதபுரம் - செகந்திராபாத் விரைவு ரயில் (வண்டி எண் 07696) மார்ச் ‌03ம்தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை

வாராந்திர  சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9.50 மணிக்கு இராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு   காரைக்குடி , அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி திருவாரூர், வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை  இரவு 9.50‌ மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது. 

எங்கெங்கு நின்று செல்லும் ?

செகந்திராபாத்   நலகொண்டா மிரியால்குடா சட்டெனப்பள்ளி குண்டூர் ,தெனாலி, பாபட்லா, ஓங்கோல்,  கவாலி ,நெல்லூர் கூடுர்,சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திரிப்பாதிரிபூலியூர் (கடலூர்),சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, இராமநாதபுரம், இராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களில் 
நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments