வாங்கியதோ ரூ.10 கட்டணம் அபராதமோ ரூ.10 ஆயிரம் ஒப்பந்ததாரருக்கு நீதிமன்றம் உத்தரவு




திருநெல்வேலி,-திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் கட்டணமாக ரூ.10 வசூலித்த ரயில்வே ஒப்பந்ததாரர் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது
மேலப்பாளையம் பஹ்மிதா 22, 2021 ஜன., 7 உறவினரை ரயிலில் அனுப்ப டூவீலரில் சென்றார். ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன் பகுதியை குத்தகைக்கு எடுத்த ஒப்பந்ததாரர் அனைத்து டூவீலர்களிடமும் கட்டணம் வசூலித்தார்.

பஹ்மிதாவிடமும் ரூ. 10 கட்டணம் வசூலித்தார். வாகனத்தை நிறுத்தாமல் உறவினரை இறக்கி விட்டு சென்று விடுவதாக பஹ்மிதா கூறியும் கட்டணம் வசூலித்தார். அதற்கான ரசீதில் ரயில்வே முத்திரை, தேதி, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட குறிப்புகள் இல்லை.

இதனால் பஹ்மிதா நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது சார்பில் வழக்கறிஞர் பிரம்மா ஆஜரானார். நீதிபதி கிளாஸ்டோன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் ஒப்பந்ததாரர் ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவாக ரூ.2000 வழங்கவும் உத்தரவிட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments