பட்டுக்கோட்டை -அதிராம்பட்டினத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினத்திற்கு இடைப்பட்ட ஊர்க ளான முதல்சேரி, பள்ளிக்கொ ண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு போன்ற பகுதிகளில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தினமும் தங்கள் அத்தியாவசிய தேவைக்கா கவும், பணி நிமித்தமாகவும் பட்டுக்கோட்டைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்ல இடைநில்லா பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மேற்கண்ட கிராமங்களில் நின்று செல்வதில்லை.

இதனால் அந்த கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர்.

அந்த பஸ்களும் சரியான நேரத்தில் வராததால் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இடைப்பட்ட ஊர்களில் நின்று செல்லும் வகையில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments