திருத்துறைப்பூண்டி அருகே திருவாரூர் காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு ரெயிலில் அடிபட்டு பெட்டிக்கடைக்காரர் தலை துண்டாகி பலி
திருத்துறைப்பூண்டி அருகே ரெயிலில் அடிபட்டு பெட்டிக்கடைக்காரர் தலை துண்டாகி பலியானார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பெட்டிக்கடைக்காரர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உப்புகுள தெருவில் வசித்து வந்தவர் சண்முகம் (வயது 65). இவர், திருத்துறைப்பூண்டி ஜவுளிக்கடை தெருவில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், கோபி கிருஷ்ணன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆன நிலையில், இவர் மகன் மற்றும் மனைவியோடு வசித்து வந்தார்.

இந்த நிலையில் திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் ரெயில் நேற்று காலை திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. சிறிது தூரம் சென்றதும் நெடும்பலம் ரெயில்வே கேட் அருகில் சண்முகம் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்று உள்ளார்.

ரெயில் மோதி தலை துண்டாகி பலி

அப்போது சண்முகத்தின் மீது ரெயில் மோதியது. இதில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார், சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார், சண்முகம் தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

ரெயில் மோதி தலை துண்டாகி பெட்டிக்கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments