அகமதாபாத் - திருச்சி வாரந்திர சிறப்பு ரயில் சேவை மே மாதம் வரை நீட்டிப்பு
தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயலாளர் பாபநாசம் சரவணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ரயில் பயணிகள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து திருச்சி வழியாக தஞ்சை வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்மத்திய ரயில்வே அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோல் ரயில் பயணிகள் சங்கத்தின் பிரதான கோரிக்கையாக உள்ள திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக அகமதாபாத் செல்லும் ரயில் சேவை வரும் மே மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வண்டி எண் 09420 திருச்சி சென்னை அகமதாபாத் ரயில் சேவை வரும் மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதாவது ஏப்ரல் மாதத்தில் 9, 16, 23 ஆகிய தேதிகளிலும் மே மாதத்தில் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.

ஞாயிறு அன்று திருச்சியிலிருந்து அதிகாலை 5. 45 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் 7. 02, பாபநாசம் 7. 25, கும்பகோணம் காலை 7. 52, மயிலாடு துறை காலை 8. 55, வைத்தீஸ்வரன் கோவில், 9. 12, சீர்காழி 9. 21, சிதம்பரம் 9. 50, கடலூர் 10. 27, விழுப்புரம் 12. 15, செங்கல்பட்டு மதியம் 1. 35, தாம்பரம் 2. 05, எழும்பூர் 3. 00, பெரம்பூர் 3. 52, அரக்கோணம் 4. 50, ரேணிகுண்டா இரவு 6. 35, மந்திராலயம் நள்ளிரவு 12: 37. புனே காலை 10. 50, கல்யாண் மதியம் 1. 25, பரோடா இரவு 6. 38, அகமதாபாத்துக்கு இரவு 9. 15க்கு செல்லும். ஆகவே ரயில் பயணிகள் அனைவரும் தங்கள் பயணத்தை திட்டமிட்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments