KSR பெங்களூரு- வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம் தென் மேற்கு ரயில்வே அறிவிப்பு




சேலம் ஈரோடு கரூர் திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் வழியாக KSR பெங்களூர் - வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

ஆன்மிக சுற்றுலா தளம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலவர் கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்குகிறது. இதனால் நாகை மாவட்டத்திற்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். பெங்களூரு மார்க்கமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வேளாங்கண்ணிக்கு வந்து செல்கின்றனர்.

பெங்களூரு- வேளாங்கண்ணிக்கு புதிய ரெயில்

பெங்களூரு- வேளாங்கண்ணி இடையே புதிய ரெயில் இயக்க வேண்டும் என ரெயில்வே துறைக்கு பல்வேறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கான பணிகளில் தென்மேற்கு ரெயில்வே மும்முரமாக ஈடுபட்டு வந்தது.

இதை தொடர்ந்து வேளாங்கண்ணி- பெங்களூரு இடையே புதிய வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படும் என தென்மேற்கு ரெயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

4 வாரங்கள் இயக்கம்

அந்த அறிவிப்பில் வருகிற 25.3.2023 முதல் 1.4.2023, 8.4.2023, 15.4.2023 வரை உள்ள சனிக்கிழமைகளில் பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணிக்கும், 26.3.2023 முதல் 2.4.2023, 9.4.2023, 16.4.2023 வரை உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூருக்கும் இடையே 4 வாரங்கள் புதிய சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7.50 மணிக்கு பெங்களுருவில் இருந்து புறப்பட்டு கண்டோன்மெண்ட், கிருஷ்ணாபுரம், பங்காருபேட், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கருர், திருச்சி, தஞ்சை, திருவாருர், நாகை, வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து சேரும். அன்று இரவு 11.55 மணிக்கு அதே மார்க்கத்தில் இயக்கப்பட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments