கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் வெளுத்து வாங்கிய கோடை மழை




கோபாலப்பட்டிணம்  மீமிசல் பகுதியில்   கோடை மழை பெய்தது
 

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெறிக்க தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு திடீர் மழை மகிழ்ச்சியைத் தந்துள்ளது. வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வால் தமிழகத்தில் மழை தொடர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை,  ராமநாதபுரம், கோவை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வெயிலின் தாக்கம் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த வெயிலின் தாக்கம் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. குளிர்பான கடைகள் பழக்கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இரவில் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் தூங்க முடியாமல் மக்கள் தவித்தனர். இரவு நேரங்களில் மின் விசிறியில் இருந்து வரும் காற்று கூட அனல் காற்றாக தான் வீசியது.இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்   இன்று மார்ச் 22 புதன்கிழமை திடீரென காலை 05.00 மனியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது.இந்த மழை சுமார் அரை ஒருமணி நேரம் நீடித்தது. இதனால் வெப்பம் ஒரளவு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது .சாலைகளில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தற்போது மழை பெய்ததால் எப்போது நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளம்  நிறையும் என ஏக்கத்துடன் கோபாலப்பட்டிணம் மக்கள் உள்ளனர்...













எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments