நிறைபிறையில் நிரம்பும் சொந்தங்கள் பற்றி கோபலப்பட்டிணத்தின் நிறைபிறை ஞாபகங்களை உங்கள் முன் இன்றைய இளைய தலைமுறைக்கு GPM மீடியா நினைவுப்படுத்துகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள எழில் மிகு அழகு கொண்ட கடற்கரை கிராமம் தான் கோபாலப்பட்டிணம்.
ரமலானை வரவேற்கும் வகையில் ரமலான் பிறை தென்படுவதற்கு முந்தைய நாள் நிறைபிறை கொண்டாடப்படுகிறது. நிறைபிறை என்றாலே கோபாலப்பட்டிணம் மக்கள் அதன் நிகழ்வுகளை எண்ணி பூரிப்படைவார்கள்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை நிறை பிறை அன்று மதியம் வீட்டில் சமையல் செய்து டிபன் பாக்சில் எடுத்து கொண்டு குடும்பம் குடும்பமாகவும், நண்பர்களாவும் ஒன்று சேர்ந்து அரண்மனை தோப்பிற்கு படையெடுப்பார்கள். அன்றைய தினம் மக்கள் மகிழ்ச்சி பொங்க ஒருவருக்கொருவர் சமைத்து கொண்டு வந்திருக்கும் உணவுகளை மாறி மாறி பரிமாறிக்கொண்டு சாப்பிடுவார்கள். பின்பு தோப்பு பகுதியில் ஆண்கள் கபடி மற்றும் ஓடி பிடித்து விளையாடுவார்கள். பெண் பிள்ளைகள் ஓடி பிடித்தல், நொண்டி, சிப்பிங் மற்றும் க்ளாச் விளையாண்டும் அந்த பொழுதை சந்தோசமாக கழிப்பார்கள். இறுதியாக வீடும் திரும்பும் போது குடத்தில் ஊற்றில் குடி தண்ணீர் இறைத்து கொண்டு செல்வார்கள்.
ஒரு சிலர் சொந்த பந்தங்களை அழைத்து கொண்டு அவர்களின் சொந்த கொள்ளைகளுக்குகோ அல்லது தோப்புகளுக்கோ சென்று கூட்டான்சோறு போன்று சமைத்து சொந்த பந்தங்கள் மகிழ்ச்சி பொங்க உணவுகளை பரிமாறிக்கொண்டு சாப்பிடுவார்கள். இறுதியாக அந்த காலநிலையில் பழங்களின் சீசனை பொருத்து தோட்டத்தில் உள்ள பழங்களை சொந்த பந்தங்களுக்கு பறித்து கொடுப்பார்கள். இவ்வாறாக ஒரு சிலர் அன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பார்கள்.
ஒரு சிலர் மாடி வீடுகளில் நிறை பிறை அன்று மட்டும் சிறிய கொட்டகை அமைத்து பக்கத்து வீட்டு சிறுவர்கள் இணைந்து அதற்குள் அமர்ந்து சாப்பிடுவார்கள்.
சிறுவர்கள் சிலர் அன்றைய காலகட்டத்தில் கோபாலப்பட்டிணம் பகுதிகளில் சூழ்ந்து காணப்படும் கருவேல மர பகுதியில் கொள்ளை செய்து நிறை பிறை அன்று அங்கு சென்று உணவுகளை உண்பார்கள்.மேலும் அங்கு வீட்டை போன்று அனைத்து வசதிகளையும் செய்து வைத்திருப்பார்கள். குறிப்பாக பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் சீனி குச்சி காய்ச்சுவது, பால்கோவா காய்ச்சுவது, கூட்டான்சோறு ஆக்கி சாப்பிடுவது மற்றும் பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொண்டு போய் பங்கிட்டு சாப்பிடுவது அன்றைய இளைய தலைமுறைகளின் பொழுது போக்க இருந்தது. ஒன்னு சொல்ல மறந்தாச்சி அந்த கொல்லைக்கு காவலாக ஒரு குட்டி நாய் ஒன்று இருக்கும். நாய் குட்டிக்கு கவனிப்பும் பலமாக இருக்கும்.
நிறை பிறை என்ற ஓன்று எப்படி உருவானது என்று தெரியாது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் நிறை பிறை என்ற நிகழ்வு மூலம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் தங்கள் வீடுகளில் சமைத்து எடுத்து வந்து ஒற்றுமையாக ஒன்று கூடி உணவுகளை பரிமாறிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர் என்றால் மிகையாகாது. ஆனால் இது போன்று இன்றைய காலகட்டத்தில் நடக்குமா என்றால் கண்டிப்பாக அது நடக்காது என்றே கூறலாம். காரணம் விருந்து என்று ஒரு வீட்டில் சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்று கூடினால் அங்கு அனைவரும் ஆளுக்கொரு செல்போனை வைத்து கொண்டு தடவுவதையே பார்க்க முடிகிறது. எனவே இதன் மூலம் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் அனைவரும் ஒன்று சேரும் போது செல்போனை நோண்டுவதை விட்டு விட்டு குடும்பத்தார்களிடம் மனம் விட்டு பேசி மகிழுங்கள்.
நிறை பிறை என்ற ஒன்று முன்பு போன்று நடைபெறுமா.?
ரமலானின் கடைசி நாள்:
ரமலானின் கடைசி நாளன்று பிறையை பார்த்ததும் அன்று சிறுவர்கள் சின்ன பள்ளிவாசல், பொட்டல், கடற்கரை மற்றும் அரண்மனை தோப்பில் சென்று வாண்டாவை எரித்து விட்டு நாளை பெருநாள் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். (அன்றைய காலகட்டத்தில் அறியாமல் செய்த பொழுதுபோக்கில் இதுவும் ஒன்று)
இந்த பதிவை இன்றைய தலைமுறைக்கு எடுத்து செல்வதில் GPM மீடியா பெருமை கொள்கிறது.
நிறை பிறை எப்படி உருவானது என்று யாருக்கும் வரலாறுகள் தெரிந்தால் GPM மீடியாவிற்கு எழுதி அனுப்பலாம். நிறை பிறை கூடும், கூடாது என்ற விவாத்திற்குள் போக வேண்டாம்.
இது போன்று நமதூரில் வரலாற்று பதிவுகள் இருந்தால் அதைப்பற்றி தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அதை தாராளமாக GPM மீடியாவில் பதிவிடுகிறோம்.
இந்த பதிவில் தவறுகள் எதுவும் இருப்பின் எங்களுக்கு சுட்டி காட்டுங்கள் அதை திருத்தி கொள்கின்றோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.