கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக பெண்களுக்கான இரண்டாம் ஆண்டு இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக பெண்களுக்கான இரண்டாம் ஆண்டு இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி வருகிற 02-ஏப்ரல்-2023 ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.00 மணியளவில் கேள்விகள் வெளியிடப்பட்டு வருகிற 11-ஏப்ரல்-2023 செவ்வாய்க்கிழமை அன்று இரவுக்குள் பதில்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்பார்ந்த சகோதரிகளே, தாய்மார்களே நாம் அனைவரும் மேன்மை பொருந்திய ரமலான் மாதத்தை அடைந்திருக்கிறோம். இந்த மாதத்தில் அதிகமாக நல்ல அமல்களை செய்தும், திக்ருகளை செய்தும் அனைத்தையும் படைத்த இறைவனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வால் உலக மக்களுக்காக இந்த புனிதமிகு மாதத்தில் இறக்கியருளப்பட்ட திருகுர்ஆனை வாசிக்கவும், மார்க்கத்தோடு நம்மை தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டும். இன்னும் அதன்படி என்றென்றும் நம்முடைய வாழ்க்கையை அமைத்து இறைவனுக்கு நெருக்கமான கீழ்படிந்து வணங்கிய அடியாராக வாழ்ந்து மரணிக்க வேண்டும்.
எனவே இந்த ரமலான் மாதத்தில் அனைவரும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில் பெண்களுக்கான இரண்டாம் ஆண்டு கேள்வி-பதில் போட்டியை நடத்த உள்ளோம்.
வெற்றி பெறுவோரை சிறப்பிக்கும் வகையில் முதல் நான்கு பரிசுகளும், அதைத் தொடர்ந்து சிறப்பாக பதிலளிக்கும் பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இந்த போட்டிக்கான கேள்விகள் வருகிற 02-ஏப்ரல்-2023 ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.00 மணிக்கு சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் குழுக்கள், செய்தி குழுமங்கள் வாயிலாக வெளியிடப்படும்.
கேள்விக்கான பதில்கள் வருகிற 11-ஏப்ரல்-2023 செவ்வாய்க்கிழமை அன்று இரவு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பதில் தாள்களை இரவுத் தொழுகை நடைபெறும் அனைத்துப் பள்ளிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் பதில் பெட்டிகளில் இரவு 09.00 மணிக்கு முன் போட வேண்டும்.
குறிப்பு:
- ஒரு வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் (தாய், சகோதரி, மகள், மருமகள்) ஒரு பதில்தாள் மட்டுமே ஏற்கப்படும்.
- கேள்வி எண்ணையும், கேள்வியை முழுவதுமாக குறிப்பிட்டு பதில்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- A4-தாளில் பதில்கள் எழுதப்பட்டு பின் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
- பதில் தாள்கள் தவறினால் குழு பொறுப்பேற்காது.
- இந்த போட்டியில் விதிமுறைகள், நிபந்தனைகளில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்களை ஏற்படுத்தவும், தவறு ஏதும் இருக்கும் பட்சத்தில் முன் அறிவிப்பின்றி பதில் தாளை நிராகரிக்கும் அதிகாரத்தையும் அறக்கட்டளை கொண்டுள்ளது.
- எனவே மிக முக்கியமாக பதில்தாள்கள் ஒரே குடும்பம், ஒரே நபரால் ஒன்றுக்கும் மேற்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்பது போட்டிக்கான சிறப்புக்குழுவின் ஆய்வில் தெரியவந்தால் அதை சார்ந்துள்ள அத்தனை பதில்தாள்களும் நிராகரிக்கப்படும்.
- பதில்தாளில் போட்டியாளரின் பெயர் மற்றும் தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் மேலும் தந்தையின் தொடர்பு எண் அல்லது கணவரின் தொடர்பு எண் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தயாராக இருங்கள்! இன்றே குர்ஆனை திறந்து இறைவசனங்களை உற்று நோக்குங்கள்!
அதை மனதில் நிலைநிறுத்தி தங்களது அன்றாட வாழ்க்கையில் அமல்படுத்துங்கள்!
மார்க்க மற்றும் சமூக பணியில்
என்றும் உதவும் கரங்கள்
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை,
கோபாலப்பட்டிணம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
தகவல்: அபு, என்றும் உதவும் கரங்கள், கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.