கோபாலப்பட்டிணம் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!




கோபாலப்பட்டிணம் கூட்டுறவுச் சங்கத் தலைவர் மற்றும் தலைவி பதவிகளுக்குப் போட்டியிட விருப்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

​இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களுடைய சுயவிவரங்களுடன் பின்வரும் ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்:
  1. ​ஆதார் அட்டை
  2. ​குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)
  3. ​வங்கி கணக்கு புத்தக நகல் (பேங்க் பாஸ்புக்)
  4. ​கூட்டுறவு சங்க உறுப்பினர் அட்டை
  5. ​பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (2)
விண்ணப்பிக்கும் இடம்
விருப்பமுள்ளவர்கள் மணமேல்குடியில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகத்திற்குச் சென்று தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நேரில் வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இறுதித் தேதி
இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நாளை (புதன்கிழமை) என்பதால், காலதாமதத்தைத் தவிர்த்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments