மீமிசல் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்ட வாரச்சந்தை கடைகள்: ஸ்தம்பித்த போக்குவரத்து - பொதுமக்கள் அவதி!



மீமிசல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக, வாரச்சந்தை கடைகள் பேருந்து நிலையத்திற்கு வெளியே பிரதான சாலையில் அமைக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

​மீமிசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் வாரச்சந்தை, வழக்கமாக பேருந்து நிலையத்தின் உட்பகுதியில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால், நேற்று (புதன்கிழமை) பெரும்பாலான வியாபாரிகள் தங்களது கடைகளை பேருந்து நிலையத்திற்கு வெளியேயும், பிரதான சாலையோரங்களிலும் அமைத்திருந்தனர்.

பேருந்துகள் செல்ல முடியாத அவலம்
​சாலையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டதால், வெளியூர்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதனால், பயணிகள் சாலையிலேயே இறங்கி நடக்க வேண்டிய சூழ்நிலை உருவானதுடன், அப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
பொதுமக்கள் கோரிக்கை
​இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், "வாரச்சந்தை கடைகளை முறைப்படுத்தி, பேருந்து நிலையத்தின் உள்ளே மட்டுமே அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, காவல்துறையினரும், உள்ளாட்சி நிர்வாகமும் இணைந்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments