புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கடலோர கிராமமான கோபாலப்பட்டிணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
கடந்த சில தினங்களாக இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டதோடு, கடுமையான உஷ்ணமும் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை வானில் கார்மேகங்கள் திரண்டு, திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
4 மணி நேரம் மின்தடை
மழை பெய்யத் தொடங்கியதில் இருந்தே பலத்த காற்று வீசியதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், சில இடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளாலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, மீமிசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்தடை ஏற்பட்டது குறிப்பிடதக்கது. பின்னர் நிலைமை சீரானதை அடுத்து, மின்வாரிய ஊழியர்கள் மின் விநியோகத்தை முறைப்படுத்தினர்.
வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி
இந்த திடீர் மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து சற்றே பாதிக்கப்பட்டது. இருப்பினும், நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த பலத்த மழையால் வெப்பம் முற்றிலும் தணிந்து, இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கோபாலப்பட்டிணம் பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.