ஆவுடையார்கோவிலில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
ஆவுடையார்கோவிலிருந்து குளத்துக்குடியிருப்பு வழியாக பெருநாலூர் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி குளத்துக்குடியிருப்பு, பெருநாவலூர், தனியனேந்தல், மீனாங்குடியிருப்பு மற்றும் அண்ணாநகர் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நபார்டு மற்றும் கிராம சாலை திட்டத்தில் 2023-2024-ம் நிதியாண்டில் இந்த சாலையை சீரமைத்து தருவதாக நபார்டு திட்ட கோட்ட பொறியாளர் உறுதி அளித்தார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments