சவூதி அரேபியாவில் பிறை தென்படாததால் மார்ச்-23 ரமலான் முதல் நோன்பு என அறிவிப்பு..!!சவூதி அரேபியாவில் வருகிற மார்ச்-23 ரமலான் முதல் நோன்பு ஆரம்பம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் மார்ச்-21 செவ்வாய்க்கிழமை ரமலான் பிறையை பார்க்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாபான் 30 ஆக பூர்த்தி செய்து கொண்டு வியாழக்கிழமை அன்று (23-03-23) ரமலான் முதல் நோன்பு என அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் நாளை இரவு இஷா தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments