கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல்களை சிறப்பாக சீரமைத்த GPM பள்ளி சீரமைப்பு குழுவிற்கு GPM மீடியா சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்!




கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல்களை சிறப்பாக சீரமைத்த GPM பள்ளி சீரமைப்பு குழுவை GPM மீடியா மனதார பாராட்டுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் நிதிகளை வாரி வழங்க ஏராளமான மக்கள் முன் வருகின்றனர். ஆனால் அந்த நிதியை வைத்து களத்தில் இருந்து வேலைகளை செய்வதற்கு சிலரே முன் வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டரை வருடங்களாக GPM பள்ளி சீரமைப்பு குழு சார்பாக நான்கு பேர் கொண்ட குழு மராமத்து பணிகளை செய்து வந்தார்கள்.

மேலும் பள்ளிவாசல்களில் நடைபெறும் வேலைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் GPM பள்ளி சீரமைப்பு குழு என்ற வாட்ஸ்ஆப் தளத்தை உருவாக்கி அதில் நிதி வழங்குபர்வர்களின் விபரம் அடங்கிய ரசீது மற்றும் தினமும் பள்ளிவாசல்களில் நடைபெறும் வேலைகளின் நிலை குறித்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். மேலும் மாதம் ஒரு முறை கணக்கு வரவு செலவுகளை பதிவிட்டு வந்தனர்.
 
கோபாலப்பட்டிணத்தில் உள்ள மண்ணின் மைந்தர்கள் மற்றும் செல்வந்தர்கள், வியாபார பெருமக்கள் என தங்களால் முடிந்த அளவு பொருளாதாரங்களை GPM பள்ளி சீரமைப்பு குழுவிடம் வழங்கினார்கள். பள்ளி வேலைகளை சிக்கனமாகவும், பொறுப்பாகவும் தொலைநோக்குடனும் இந்த வேலைகளை செய்து வந்தார்கள். மேலும் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தங்களது நேரத்தை இந்த குழு செலவழித்தார்கள். ஆகவே இவர்களை GPM மீடியா சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார். (அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 18836)

பள்ளிவாசல்களை சீரமைக்க பொருளாதார உதவிகள் வழங்கிய அனைவருக்கும் GPM மீடியா சார்பாக நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் GPM பள்ளி சீரமைப்பு குழுவில் பயணித்த 
  • ஹாஜி.RSM.முகம்மது அன்சாரி த/பெ முகைதீன் பக்கீர், 
  • ஹாஜி.KMS.கலந்தர் த/பெ KM.சேக் தாவூத், 
  • V.E.உமர்கத்தா த/பெ இப்ராம்சா, 
  • ஹாஜி.KM.முகம்மது பாக்கர் த/பெ முகைதீன் 
ஆகியோரின் பணிகள் மென்மேலும் தொடர வேண்டும். 
பள்ளிவாசல்களின் அனைத்து வேலைகளையும் மிகவும் சிறப்பாக செய்து முடித்த இந்த நான்கு பேருக்கும் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து உழைத்த, பொருளாதார உதவிகள் செய்தவர்களுக்காகவும் நாம் அனைவரும் துவா செய்வோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments