ஜெகதாப்பட்டினத்தில் மீனவர்கள் உரிமையை மீட்டெடுக்கவும், அவர்களின் நலன்களை காக்கவும் வலியுறுத்தி திராவிடர் கழக சார்பில் மாநாடு அடுத்த மாதம் ஏப்ரல் 14-ந் தேதி நடக்கிறது திராவிட கழக தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 172 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக விசைப்படகுடன் 16 மீனவர்களை கைது செய்துள்ளனர்.தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது மோசமான தொடர்கதையாக நீடிக்கிறது. மத்திய அரசு இப்பிரச்சினையை கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருப்பதும், நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது.

இதற்கு நிரந்தர தீர்வு காணவும், மீனவர்கள் உரிமையை மீட்டெடுக்கவும், அவர்களின் நலன்களை காக்கவும் வலியுறுத்தி ஏப்ரல் 14-ந் தேதி ஜெகதாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள கோட்டைப்பட்டினம் மீனவர்களின் விடுதலைக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments