கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக பெண்களுக்கான இரண்டாம் ஆண்டு இஸ்லாமிய கேள்வி-பதில் போட்டிக்கான கேள்விகள் வெளியீடு!கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான கேள்விகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ரமலான் மாதத்தில் அனைவரும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை வாசிக்க வேண்டும், மார்க்கத்தோடு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த ரமலான் மாதத்தின் இறைவனின் நாட்டத்தால் பெண்களுக்கான இரண்டாம் ஆண்டு கேள்வி பதில் போட்டி நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் கோபாலப்பட்டிணம் பெண்கள் அனைவரும் பங்கேற்று இந்த ரமலானில் மார்க்க அறிவை பெருக்கி கொள்ளவும், தெரியாத மார்க்க விஷயங்களை அறிந்து கொண்டு புத்துணர்ச்சி பெற வேண்டி கேட்டு கொள்கின்றோம்.

(பதில்களை எழுதும் போட்டியாளர்கள் கண்டிப்பாக விதிமுறைகளை படிக்கவும்)கேள்விகளை டவுன்லோடு செய்ய இதோ லிக்ங்-  

DOWNLOAD NOW       LINK-1    

*போட்டியின் விதிமுறைகள்:
  • கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • விடைத்தாளில் தங்களது பெயர் மற்றும் தகப்பனார் அல்லது கணவர் பெயர் மற்றும் தகப்பனார் தொடர்பு எண் அல்லது கணவர் தொடர்பு எண்ணை குறிப்பிடவும்.
  • A4-தாள் அல்லது டிம்மி தாளில் மட்டுமே பதில்களை மிகத் தெளிவாக அழகான நடையில் எழுத வேண்டும்.
  • கேள்வித்தாளில் வரிசை எண் எவ்வாறு உள்ளதோ அதே வரிசை எண் பிரகாரம் பதில் தாளில் கேள்வியுடன் பதிலை எழுத வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்டோர் பங்குபெற்றால் அவர்களது விடைத்தாள் நிராகரிக்கப்படும்.
  • விடைத்தாளை 11-Apr-2023 செவ்வாய்கிழமை அன்று பெண்களுக்கு இரவுத் தொழுகை நடைபெறும் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரஸா இடங்களிலும் செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பதில் தாள் பெட்டி வைக்கப்படும். உங்களுடைய பதில் தாளை போஸ்ட் கவருடன் இணைத்து பெட்டியில் போடவும்.  
  • போட்டி தொடர்பான எந்த ஒரு முடிவுகளும் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளைக்கு உட்பட்டதாகும்.
இந்த போட்டியில் தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு உங்கள் அனைவரையும் என்றும் உதவும் கரங்கள் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த போட்டியில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த பெண்கள் அதிகமானோர் பங்கேற்று பரிசுகளை வெல்லவும், மார்க்க அறிவை பட்டை தீட்டி கொள்ளவும் GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மறந்து விட வேண்டாம்: வரும் 11/04/2023 செவ்வாய்க்கிழமை அன்று பெண்களுக்கு தொழுகை நடைபெறும் இடங்களில் வைக்கப்படும் பெட்டிகளில் தங்கள் விடைத்தாள்களை இரவு 9.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணியில் 
என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை, 
கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments