மேற்பனைக்காடு அரசு பள்ளியில் சொந்த பணத்தில் வகுப்பறைக்கு `பெயிண்ட்' அடித்த மாணவர்கள்
கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 32 மாணவர்கள் விரைவில் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை நாளில் பள்ளிக்கு சென்று கடந்த ஒரு வருடமாக தாங்கள் படித்த பள்ளி வகுப்பறைக்கு தங்கள் சொந்த செலவில் பெயிண்ட் வாங்கி வந்து சுவர்களில் தாங்களே வண்ணம் தீட்டினார்கள். இதைப்பார்த்த மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் 10-ம் வகுப்பு மாணவர்களை வெகுவாக பாராட்டினார்கள். தங்கள் வகுப்பறையை மாணவர்களே சுத்தம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments