மணமேல்குடி ஒன்றியத்தில் நடைபெற்ற வானவில் மன்ற போட்டிகள்
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வானவில் மன்ற போட்டிகள் மணமேல்குடி வட்டார வளமையத்தில் நடைபெற்றது. 

இப் போட்டியில் அன்றாட வாழ்வில் ஒளியின் பயன்பாடுகள் சார்ந்த அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்கள்.

இப் போட்டியின் நடுவர்களாக  புதுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜோக்கின் ராய் அவர்கள் மற்றும் வானவில் மன்ற கருத்தாளர்கள் சண்முகப்பிரியா மற்றும் ஜெனிட்டா ஆகியோர் செயல்பட்டனர்.  

இப் போட்டியில் 9 பள்ளிகளில் இருந்து  மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இப் போட்டியினை  அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் மதிப்புக்குரிய திரு இளையராஜா அவர்கள் பார்வையிட்டு மாணவர்களின் செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்துக்களை கூறினார். 

 இந்நிகழ்வில் மணமேல்குடி வட்டார தலைமையையும் மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments