அம்ரித் பாரத் திட்டத்தில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை ரூ.6¾ கோடியில் மேம்படுத்த திட்டம்




அம்ரித் பாரத் திட்டத்தில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை ரூ.6¾ கோடியில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்

நாடு முழுவதும் பல்வேறு ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை மேம்படுத்த அம்ரித் பாரத் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டிய ரெயில் நிலையங்களை தேர்வு செய்து பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அந்த வகையில் தெற்கு ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை ரெயில் நிலையமும் இத்திட்டத்தில் இடம்பிடித்துள்ளது.

இத்திட்டத்தில் பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆனந்த் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.

ரூ.6¾ கோடியில் பணிகள்

இந்த நிலையில் இத்திட்டத்தில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரூ.6 கோடியே 89 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரெயில் நிலையத்தில் முழு நீள நடைமேடை மேற்கூரைகள் அமைத்தல், எல்.இ.டி. திரைகள் அமைத்தல், புதிய நுழைவு வாயில், புதிய கட்டிடங்கள், புதிய இடவசதி, ரெயில் நிலையத்தை புதுப்பொலிவாக்க பணிகள், மரங்கள் நடுதல், விரிவான வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒப்பந்தம் விடப்பட்டுள்ள நிலையில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments