புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊாராட்சியில் தொழிலாளர் தின கிராம சபைக் கூட்டம் 01.05.2023 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி MSc,BEd., தலைமையிலும், திருமதி.பிரியா குப்புராஜா ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி.கமர்நிஷா அபுதாஹீர் அவர்கள், திரு.பெ.ரமேஷ் அவர்கள், திரு.மு.உதயகுமார் ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களும், சுய உதவிக் குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
கூட்டப்பொருள்கள்:-
- குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பற்றி விவாதித்தல்
- கிராமவளர்ச்சி திட்டம்
- தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம்
- கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் - ஊரகம்
- இதர பொருள்கள்
இவண்,
ரா.சீதாலெட்சுமி MSc,BEd.,
ஊராட்சி மன்ற தலைவர்,
உதயம் அபுதாஹீர், துணைத்தலைவர்
உறுப்பினர்கள்:
EM.சித்தி நிஜாமியா,
A.அபுதாஹீர்,
A.மும்தாஜ்பேகம்,
R.ரஜபுநிஜா,
S.பெனாசீர் பேகம்
A. சாதிக் பாட்ஷா,
M. அன்வர் பாட்ஷா,
R. மல்லிகா,
G.சிங்காரி,
S.லெத்திப்,
S.பிரேமா
நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கீழ் உள்ள ஊர்கள்
1. கோபாலப்பட்டினம்
2. கணபதிப்பட்டினம்
3. குறிச்சிவயல்
4. முத்துக்குடா (மீனவர்)
5. நாட்டாணி
6. ஆர்.புதுப்பட்டினம் (மீனவர்)
7. ஆர்.புதுப்பட்டினம் (முஸ்லிம்)
8. முத்துக்குடா (முஸ்லிம் )
9. அண்டியப்பன்காடு
10. கூடலூர்
11. பாதரக்குடி
12. புரசக்குடி
கிராம சபை = சட்ட சபை
கிராமங்களின் வளர்ச்சியே
ஒரு நாட்டின் வளர்ச்சி
நாடாளுமன்றத்தில் ஒரு MP க்கு என்ன உரிமையோ,அதேபோல் சட்டமன்றத்தில் ஒரு MLA வுக்கு என்ன உரிமையோ, அதே உரிமை நமது கிராமங்களில் நடைபெறும் கிராம சபையில் நாம் அனைவருக்கும் கலந்து கொண்டு கேள்வி கேட்க உரிமை உண்டு.
ஆகவே நாளை 01.05.2023 திங்கட்கிழமை தொழிலாளர் தினத்தில் அனைவரும் தவறாமல் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் கிராம வளர்ச்சிக்காகவும் உங்கள் உரிமையை நிலைநாட்டவும் உங்களது ஜனநாயக கடமையை ஆற்றுமாறு தங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
மரக்கன்றுகள் நடுவோம்
மழை பெறுவோம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.