கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் பழைய மின் மோட்டார் பழுதானதால் பொருத்தப்பட்ட புதிய மின் மோட்டார்!



கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் பழைய மின் மோட்டார் பழுதானதால் புதிய மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலை பள்ளி அருகில் உள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் அவுலியா நகர் மற்றும் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் மற்றும் அவுலியா நகர் பகுதிகளுக்கு தனி, தனியாக மின் மோட்டார் வைத்து அதன் மூலம் தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவுலியா நகருக்கு விநியோகிக்கப்பட்டு வந்த மின் மோட்டார் அடிக்கடி பழுதடைந்து தண்ணீரின்றி தவித்து வந்த நிலையில் அப்பகுதி மக்கள் புதிய மின் மோட்டார் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று 28.04.2023 புதிய மின் மோட்டார் பொருத்தப்பட்டது. புதிய மின் மோட்டார் பொருத்தும் பணியின் போது OHT பணியாளர் செய்யது இபுறாஹீம் மற்றும் இரண்டாவது வார்டு உறுப்பினர் உடனிருந்தனர்.

அவுலியா நகர் பகுதியில் சாக்கடை மற்றும் குவிந்திருக்கும் குப்பையால் அப்பகுதி மக்கள் நோய்வாய் பட்டு, பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே அப்பகுதி மக்களின் துயரங்களை துடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments