16 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகர் சென்னையில் இருந்து திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் முதல் நிரந்தர ரயிலான சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்
16 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகர் சென்னையில் இருந்து திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில்  முதல் நிரந்தர ரயிலான சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்

அகலப்பாதையாக மாற்றப்பட்ட திருவாரூர்  காரைக்குடி ரயில் வழித்தடத்தில் தலைநகர் சென்னையிலிருந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நிரந்தர தொடர் வண்டி சேவை  அறிவிக்கப்பட்டு சேவைகள் துவங்கி உள்ளது.

சிறப்பு ரயில் 

ஏற்கனவே திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் தலைநகர் சென்னை இனைத்திடும் வகையில் பகல் நேர சேவையாக  வண்டி எண் 07695 /07696 செகந்திராபாத் - ராமேஸ்வரம்  - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் வியாழக்கிழமை / வெள்ளிக்கிழமை முறையே சென்னை செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை திருவாரூர் காரைக்குடி சிவகங்கை ராமநாதபுரம்  பகுதிகளை இணைத்திடும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

நிரந்தர ரயில்

வண்டி எண் 20683 தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில்  தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 16 ஞாயிற்றுக்கிழமை‌ இரவு முதல் நிரந்தர அதிவிரைவு ரயில் சேவை துவங்கியுள்ளது. 

வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம்  அதிவிரைவு ரயில் செங்கோட்டையில் இருந்து ஏப்ரல் 17 திங்கட்கிழமை மாலை முதல் நிரந்தர அதிவிரைவு ரயில் சேவை துவங்கியுள்ளது. 

நிற்கும் இடங்கள் :

விழுப்புரம் சந்திப்பு 
திருப்பாதிரிபுலியூர் (கடலூர்)
மயிலாடுதுறை சந்திப்பு 
திருவாரூர் சந்திப்பு 
திருத்துறைப்பூண்டி சந்திப்பு 
முத்துப்பேட்டை
பட்டுக்கோட்டை
அறந்தாங்கி
காரைக்குடி சந்திப்பு
அருப்புகோட்டை
விருதுநகர் சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு
சேரன்மாதேவி
அம்பாசமுத்திரம்
பாவூர்சத்திரம்
தென்காசி சந்திப்பு

Coach Postion  :

வண்டி எண் : 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டைவண்டி எண்: 20684 - செங்கோட்டை - சென்னை தாம்பரம் 
சேவை நாட்கள் மற்றும் புறப்படும் நேரம் :-வாரம் ஒரு முறை  (16-04-2023  முதல் 29-05-2023 வரை வாராந்திர சேவையாக இயக்கப்படும்)

தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு இரவு 9-00 மணி

செங்கோட்டையில் இருந்து வாரந்தோறும் திங்கள் மாலை 4-15 மணி

வாரம் மும்முறை (01-06-2023 முதல் வாரம் மும்முறை சேவையாக இயக்கப்படும்)

தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு செவ்வாய் வியாழன் (இரவு 9-00 மணி)

செங்கோட்டையில் இருந்து வாரந்தோறும் திங்கள் புதன் வெள்ளி (மாலை 4-15 மணி)

குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி கொள்ளுங்கள் .

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments