நீர்வழி மெட்ரோ திட்டம்
இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.1137 கோடியில் நீர்வழி மெட்ரோ திட்டம் (சுற்றுலா படகு போக்குவரத்து) கொச்சியில் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது காணொலி காட்சி மூலம் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கொச்சி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள கடலில் உள்ள 11 தீவுகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்கு சென்று ரசிக்கலாம். புதிய திட்டம் மூலம் தரைவழியில் மட்டும் இருந்த மெட்ரோ திட்டம், கடல் வழியிலும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அம்சங்கள்
கொச்சி படகு குழாமில் இருந்து புறப்பட்டு கோர்ட்டு, வைபின், காக்கநாடு, துறைமுகம், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும். ஒரு படகில் 100 பேர் பயணம் மேற்கொள்ளலாம். 78 கி.மீ. சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரெயிலில் உள்ளவாறு, கழிப்பிடம், உணவு, குளிர்சாதன வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் நீர்வழி மெட்ரோ திட்ட படகுகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா பயணிகளை இந்த திட்டம் வெகுவாக கவரும். இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் வைபினில் இருந்து கோர்ட்டுக்கு 20 நிமிடங்களில் செல்லலாம். தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த படகு சேவை நடைபெறும். காலை, மாலை நேரத்தில் கோர்ட்டு-விபின் இடையே 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நீர்வழி மெட்ரோ இயக்கப்படும்.
கட்டண விவரம்
பயணிகளுக்கு கட்டணம் ரூ.20 முதல் ரூ.40 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செல்லக்கூடிய பயணிகள் பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மாதாந்திர கட்டணம் ரூ.600, அரையாண்டு கட்டணம் ரூ.1,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மற்றும் பாஸ்களை முனையங்களில் உள்ள கவுண்ட்டர்களில் கியூ ஆர்கோடு பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம். முதற்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைப்ரிட் படகுகள் மெட்ரோ சேவையில் பயன்படுத்தப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.