கோபாலப்பட்டிணம் பழைய காலனியில் பயன்பாட்டிற்கு வந்த புதிய டிரான்ஸ்பார்மர்! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!!




கோபாலப்பட்டிணம் பழைய காலனியில் புதிய டிரான்ஸ்பார்மர் செயல்பாட்டிற்கு வந்ததையடுத்து குறைந்த மின்னழுத்தத்தில் இருந்து விடியல் பெற்று மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோபாலப்பட்டிணம் பழைய காலனி பகுதியில் நீண்ட நாள்களாக லோ வோல்டேஜ் எனப்படும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக கிராம மக்கள் அடிக்கடி மின்சாரம் தடைபட்டு அவதிப்பட்டு வந்தனர். ஆகையால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பழைய காலனி தோப்பு சாலையில் கடந்த 03/02/2023 வெள்ளிக்கிழமை அன்று புதிய டிரான்ஸ்பார்மரை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

இதனையடுத்து திறப்பு விழா நடைபெற்ற நிலையில் பழைய காலனி பகுதியில் குறைந்தழுத்த மின்சாரமே வந்துள்ளது. இதுகுறித்து GPM மீடியாவிற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து புதிய டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் விநியோகம் வழங்கப்படவில்லை என அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்களின் கவனத்திற்கு GPM மீடியா கொண்டு சென்றது. அதை தொடர்ந்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் உடனடியாக கொடிக்குளம் உதவி பொறியாளரை தொடர்பு கொண்டு சீரான மின் விநியோகம் நடைபெற விரைந்து பணி செய்ய அறிவுறுத்தினார். 

மேலும் கொடிக்குளம் உதவி பொறியாளரை தொடர்பு கொண்டு புதிய டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் விநியோகம் இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது என கேட்டபோது மரங்கள் இடையூறாக இருப்பதால் அதை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் புதிய டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் விநியோகம் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக சீரான மின் விநியோகம் இருப்பதால் இருட்டில் இருந்து இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறோம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments