கோபாலப்பட்டிணம் ரேஷன் கடைகளில் இலவச வேட்டி-சேலை வழங்கல்!


கோபாலப்பட்டிணத்தில் ரேஷன் கடைகளில் இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் இரண்டு நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமாா் 1700-க்கும் மேற்பட்ட ரேஷன் காா்டுகள் புழக்கத்தில் உள்ளன.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 26 புதன்கிழமை இரண்டு ரேஷன் கடையில் இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் வரிசையாக நின்று வாங்கி சென்றனர். இது குறித்து GPM மீடியா சார்பாக ரேஷன் கடை ஊழியரிடம் விசாரித்த போது புதன்கிழமை ரேஷன் கடைகளில் வேட்டி சேலை வழங்கினோம், அடுத்ததாக வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்றார்.

தமிழக அரசு வேட்டியும், சேலையும் வழங்க உத்தரவிட்ட நிலையில் கோபாலப்பட்டிணம் ரேஷன் கடையில் சிலருக்கு வேட்டி, சேலை வழங்காமல் இரண்டு வேட்டி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments