மணமேல்குடி ஒன்றியத்தில் ஸ்டெம்( STEM) வானவில் மன்றம் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நிகழ்வினை முன்னிட்டு இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.




புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும்  தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதலின் படி

இன்று மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு  ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழாவினை முன்னிட்டு ஸ்டெம் வானவில் மன்றம்  ஒருநாள் பயிற்சி மணமேல்குடி வட்டார வளமையை மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்களின் தலைமையில் தொடங்கியது.

இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு வேல்சாமி ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


 இந்நிகழ்வில் அறிவியல் தொடர்பான எளிய அறிவியல் பரிசோதனைகள், அறிவியல் அற்புதங்கள், கணித விளையாட்டுகள் சமையலறையில் அறிவியல், விளையாட்டுகள் மற்றும் கதைகள், கற்பனை திறன் மற்றும் செயல் பாட்டு திறன், உள்ளூர்  வரைபடம் வரைதல் போன்ற தலைப்புகளில் அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்கங்கள் பயிற்சியில் வழங்கப்பட்டது.



இப்பயிற்சியினை ஸ்டெம் வானவில் மன்றம் கருத்தாளர்கள் சண்முகப்பிரியா மற்றும் ஜெனிட்டா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments