முத்துப்பேட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில நிலைதடுமாறி சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்த கார்!
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிழக்கு கடற்க்கரை சாலையில் பெங்களுரிலிருந்து வேளாங்கண்ணி செல்ல முத்துப்பேட்டை வழியாக திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென்று நிலை தடுமாறி கவிழ்ந்து சாலையோர வாய்காலில் பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த பெங்களுரை சேர்ந்த லெட்சுமி(45), வீரப்பா(65), முனியம்மா(70), அம்மு(35), கௌசல்யா(17), கிஷோர்(15), சுரேஷ்(28), சுகனா(17), அம்சவள்ளி(19), டிரைவர் சூரி(38) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 10பேர் காரின் இடிபாடுகளில் சிக்கி அனைவரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அங்கு ஏராளமான மக்கள் கூடி மீட்பு பணியில் ஈடுபட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக 9பேரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments