திருமண நிகழ்வுகளில் அனாச்சரங்களில் ஈடுபட்டால் ஜமாத் நிர்வாகம் திருமணங்களை நடத்தி வைக்காது: அனைத்து ஊர்களுக்கும் முன் உதாரணமாக அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றிய R. புதுபட்டிணம் ஜமாத்தினர்!



ஆர்.புதுப்பட்டினம் சுன்னத்துல் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலையில் திருமண நிகழ்வுகளில் அனாச்சரங்களில் ஈடுபட்டால் ஜமாத் நிர்வாகம் திருமணங்களை நடத்தி வைக்காது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருமண நிகழ்வுகளில் அதிகப்படியான அனாச்சாரங்கள் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை நம் இஸ்லாமிய சகோதரர்கள் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடலோர ஊர்களில் இது அதிகப்படியாக அனாச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அனைத்து ஊர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக ஆர்.புதுப்பட்டினம் சுன்னத்துல் ஜமாத் திருமண நிகழ்வுகளில் கீழ்க்கண்ட அனாச்சாரங்களை முழுவதுமாக தடை செய்துள்ளது. இது அனைத்து ஜமாத்திற்கும் ஒரு சிறந்த முன்னுதாரமாக அமைந்திருக்கிறது.

அனைத்து ஊர்களிலும் இதே போல் தீர்மானங்களை நிறைவேற்றினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

திருமண நிகழ்வுகளில் கீழ்க்கண்ட அண்ணாச்சரங்களை முழுவதுமாக ஆர் புதுப்பட்டினம் சுன்னத்துல் ஜமாத் சார்பாக தடை செய்யப்பட்டவை

1)குதிரை மற்றும் சாரட் வண்டி மற்றும் யானை ஊர்வலங்கள்

2) திருமண வீடுகளில் ஒளிபெருக்கி பயன்படுத்துதல்

3) தப்ஸ் மற்றும் பேண்டு வாத்தியங்கள்

4) வெடி மற்றும் வான வேடிக்கைகள் 

5) ஸ்னோ ஸ்ப்ரே மற்றும் பவர் சாட் போன்றவைகள்

6) பைக்கில் ஹாரன் அடித்துக் கொண்டே ஊர்வலம் செல்வது

7) பொதுமக்களுக்கு இடையூறாக கேக் வெட்டுவது 

8)கரகாட்டம் மற்றும் இசை நிகழ்ச்சிகள்

இதுபோன்ற அனைத்து அனாச்சாரங்களும் முற்றிலும்  தடுக்கப்பட்டுள்ளது. மீறி செய்தால் கல்யாணத்திற்கு ஜமாத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதையும், மேலும் வெளியூர் செல்லும் மாப்பிள்ளைக்கு என்ஓசி (NOC) கிடையாது என ஜமாத்தார்களால் அனைத்து தீர்மானங்களும்‌ நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது வெளியூர் மாப்பிள்ளைக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படிக்கு...
ஆர். புதுப்பட்டிணம் சுன்னத்துல் ஜமாத் தலைவர் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments