கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பாக நடத்தப்படும் கேள்வி-பதில் போட்டிக்கான பதில் தாள்கள் சமர்ப்பிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பாக நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு கேள்வி-பதில் போட்டிக்கான பதில் தாள்கள் சமர்ப்பிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அன்பார்ந்த கோபாலப்பட்டிணம் தாய்மார்களே-சகோதரிகளே,

என்றும் உதவும் கரங்கள் சார்பாக கேள்வி-பதில் போட்டி ஏப்ரல் 2 ஞாயிற்றுக்கிழமை அன்று சமூக வலைதளங்கள் மற்றும் GPM மீடியா மூலமாக கேள்வி வெளியிடப்பட்டது. தற்பொழுது கேள்வி-பதில் போட்டியின் இறுதி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஏப்ரல் 11 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை பெண்களுக்கு இரவு தொழுகை நடைபெறும் பள்ளிவாசல் முன்பகுதியில் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். வைக்கப்பட்ட பெட்டியில் உங்கள் விடைத்தாளை போடவும்.

பெட்டி வைக்கப்படும் இடங்கள்:
  • காட்டுக்குளம் பள்ளிவாசல்
  • பெண்கள் மதரஸா
  • தவ்ஹீத் மர்கஸ்
  • ஆலமரம் பள்ளிவாசல்
  • அவுலியா நகர் பள்ளிவாசல்
ஆகிய 5 இடங்களில் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் எனவே வைக்கப்பட்ட பெட்டியில் உங்கள் பதில் தாளை போடவும்.

குறிப்பு:
  • விடைத்தாள் போஸ்ட் கவருடன் இணைத்து பெட்டியில் போடவும்.
  • விடைத்தாளில் தங்களுடைய பெயர் மற்றும் தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் எழுத வேண்டும். தந்தை அல்லது கணவர் தொலைபேசி எண் எழுத வேண்டும்.
  • மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மட்டுமே பெட்டி  வைக்கப்படும். 9.00 மணிக்கு மேல் விடைத்தாளை கொண்டு வந்து சமர்ப்பித்தால் உங்கள் விடைத்தாள் ஏற்றுக்கொள்ளப்படாது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments