திருவாரூர் - காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 01 வியாழன் முதல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே தகவல் 


திருவாரூர் - காரைக்குடி  எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 01 வியாழன் முதல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது 

திருவாரூர் - காரைக்குடி- திருவாரூர் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 06197/06198) சில நாட்களாக வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என 4 நாட்கள் இயக்கப்பட்ட நிலையில் 

தற்போது ஜூன் 1-ம் தேதி முதல் திங்கள்கிழமையும் சனிக்கிழமையும் சேர்த்து மொத்தம் 6 நாட்கள் இயக்கப்படும். 

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து 7 நாட்களும் ரயில் இயங்க மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது 

06197 திருவாரூர் - காரைக்குடி 

வண்டி எண்-06197  திருவாரூரில் காலை 08:20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், பிற்பகல் காலை.11.45-க்கு காரைக்குடி சென்றடையும். 

06198 காரைக்குடி - திருவாரூர் 

பின்னர்,  அங்கிருந்து வண்டி எண் 06198 மதியம் 04:00 மணிக்கு புறப்பட்டு இரவு 07.30 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.

எங்கே எங்கே நின்று செல்லும் ?

திருவாரூர், 
மாங்குடி, 
மாவூர் ரோடு, 
திருநெல்லிக்காவல், 
அம்மனூர், 
ஆலத்தம்பாடி, 
மணலி, 
திருத்துறைப்பூண்டி, 
தில்லைவிளக்கம், 
முத்துப்பேட்டை, 
அதிராம்பட்டினம், 
பட்டுக்கோட்டை,  
ஒட்டாங்காடு , 
பேராவூரணி,
ஆயிங்குடி,
அறந்தாங்கி ,  
வளரமாணிக்கம், 
பெரியகோட்டை, 
கண்டனூர் புதுவயல்,
காரைக்குடி 

ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்..

இது குறித்து திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த  TIDIRUC உறுப்பினர்  ஆலத்தம்பாடி வெங்கடேசன் அவர்கள் கூறுகையில் 

எதிர்வரும் 01-06-2023(வியாழக்கிழமை) முதல் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி  ரயில் பாதையானது  24 *7 (முழுமையான)  போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

அதன்படி தற்காலிகமாக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் ( செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி) இயங்கிய வண்டி எண் 06197 /06198 திருவாரூர் - காரைக்குடி முன்பதிவில்லா விரைவு கட்டண சிறப்பு தொடர் வண்டி 01-06-2023 (வியாழக்கிழமை) முதல் வாரந்தோறும் ஞாயிறு தவிர ஏனைய ஆறுநாட்கள் ( திங்கள் முதல் சனிக்கிழமை வரை) இயக்கப்படும்.

மேலும் வண்டி எண் 20683 /20684 தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் வாரம் மும்முறை சேவையாக இயக்கப்படும்.

தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு செவ்வாய் வியாழன் ஆகிய மூன்று நாட்களும் மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் இயக்கப்படும்.

தாம்பரம் புறப்படும் நேரம் இரவு 9-00 மணி.

செங்கோட்டை சேரும் நேரம் காலை 10-40 மணி.

செங்கோட்டை புறப்படும் நேரம் மாலை 4-15 மணி.

தாம்பரம் சேரும் நேரம் காலை 6-05 மணி. 

திருவாரூர் - காரைக்குடி ரயில் வழித்தடம் முழுமையாக செயல்பட உறுதுணையாக இருந்து பணியாளர்கள் நியமனம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி தந்துள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அவர்களுக்கும் மற்றும் திருச்சி கோட்ட மேலாளர் திரு மனீஷ் அகர்வால் அவர்களுக்கும் முதன்மை இயக்க மேலாளர் திரு ஹரி குமார் அவர்களுக்கும்  வணிக மேலாளர் திரு செந்தில் குமார் அவர்களுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் திருவாரூர் திருத்துறைப்பூண்டி காரைக்குடி ரயில் வழித்தடத்தின் மக்கள் சார்பாகவும் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறேன்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments