"ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை"- எஸ்பிஐ வங்கி






2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு பொதுமக்கள் எந்தவொரு அடையாள ஆவணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை என பாரத ஸ்டேட் வாங்கி தெரிவித்துள்ளது. 

மேலும், ஒரே நேரத்தில் ரூ.20,000 மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

முன்னதாக, ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் மே மாதம் 23-ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments