சவுதி அரேபியாவில் மரணமடைந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் உடலை தாயகம் அனுப்பி வைத்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)சவுதி அரேபியாவில் மரணமடைந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் உடலை தாயகம் அனுப்பி வைத்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) அமைப்பினர்.

கடலூர் மாவட்டம் , காட்டுமன்னார்குடி தாலுகா ,கூடுவெளிச் சாவடி , பெரிய தெருவை சேர்ந்த கலியமூர்த்தி அவர்களுடைய மகன் சுரேஷ் சவுதி அரேபியா ரியாத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 8/5/2023 அன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து விட்டார்.

இந்த தகவலை சுரேஷ் குடும்பத்தினர் தமுமுக கடலூர் மாவட்ட தலைவர் ஷேக் தாவூத் அவர்களை தொடர்பு கொண்டு ரியாத்தில் மரணம் அடைந்த சுரேஷ் உடலை தாயகம் கொண்டுவர உதவுமறு கேட்டுக் கொண்டனர்.

உடனடியாக இந்த தகவலை ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகமது அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலை பெற்றுக் கொண்ட மண்டல தலைவர் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சமூக நலத்துறை ரியாத் மண்டல நிர்வாகிகளை சுரேஷ்  உடலை தாயகம் அனுப்புவதற்கு அனைத்து பணிகளையும் துரிதமாக முடிக்க ஆலோசனை வழங்கினார். 

அதன் அடிப்படையில் மண்டல சமூகநலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்ஷா அவர்களின் வழிகாட்டுதலில் மண்டல இணைச் செயலாளர் திருக்கோவிலூர் ஷாக்கீர் பேக் அவர்கள் முழுவதுமாக ஈடுபட்டு இறந்து போன சுரேஷ் அவர்களின் முதலாளி மற்றும் இந்திய தூதரகத்தின் முழு ஒத்துழைப்புடனும் சகோதரர் பால்ராஜ் உதவியுடன் அனைத்து பணிகளையும் முடித்து 18/5/2023 வியாழக்கிழமை அன்று சுரேஷ் உடலை விமான மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் தமுமுக கடலூர் மாவட்ட தலைவர் ஷேக் தாவூத் அவர்களும் மற்றும் பண்ருட்டி நகர தலைவர் காசிம் பாய் பண்ருட்டி நகர செயலாளர் அப்துல் கபூர் பண்ருட்டி , ஊடகப்பிரிவு செயலாளர் சிராஜுதீன் ,  நெல்லிக்குப்பத்தின் முன்னாள் நிர்வாகிகள் , கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் நாசர் , மமக நகர செயலாளர் , விவசாய அணி செயலாளர்  ஆகிய நிர்வாகிகளும் இறந்த சுரேஷ் உடலை பெற்றுக் கொண்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் சுரேஷ் சொந்த ஊரான காட்டுமன்னார்குடி கூடுவேலி சாவடியில் இருக்கும் சுரேஷ் வீட்டிற்கு கொண்டு சென்று அவர்களுடைய உறவினரிடத்தில் ஒப்படைத்தார்கள்.

 சுரேஷின் உடலைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள் தமுமுக நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

என்றென்றும் மனிதநேய பணியில்
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)
சமூக நலத்துறை
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments