புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை வழியாக செல்லும் திருச்சி - மானாமதுரை டெமு ரயிலை மதுரை வரை நீடிக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை புதுகை பயணிகளிடையே நீண்ட நாள்களாக இருந்து வருகிறது.

மதுரைக்கு தொழில் ரீதியாகவும், கல்லூரிகளுக்கும், மதுரை உயா் நீதிமன்றம் மற்றும் ஆன்மிகத் தலங்களுக்கும் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனா். மன்னாா்குடியிலிருந்து தினமும் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு திருச்சி ரயில்வே சந்திப்புக்கு காலை 9.10 மணிக்கு வரும் டெமு ரயில் பெட்டிகளை கொண்டு தான், திருச்சி- மானாமதுரை டெமு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் திருச்சி சந்திப்பிலேயே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு காலை 10.15 மணிக்கு திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரைக்குச் செல்கிறது.

இந்த ரயிலை திருச்சிக்கு வந்து 10 நிமிடங்களில் புறப்படச்செய்தால் மானாமதுரையிலிருந்து 47 கி.மீ மட்டுமே தொலைவு கொண்ட மதுரை சந்திப்பு வரை நீட்டிக்கலாம்.

மேலும், மறுமாா்க்கத்திலும் மானாமதுரையிலிருந்து மதியம் புறப்பட்டு திருச்சிக்கு மாலை 5.30 மணிக்கு வரும் ரயிலும் 50 நிமிடங்கள் திருச்சி சந்திப்பிலேயே நிறுத்திவைக்கப்பட்டு மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மன்னாா்குடி செல்கிறது,

உபரி நேரத்தையும், சந்திப்புக்குள் செல்வதற்கான காத்திருப்பு நேரத்தையும் கணக்கிட்டு இயக்கினால் திருச்சி- மதுரை இடையே இந்த டெமு ரயிலை தாராளமாக இயக்கலாம் எனவும் பயணிகள் கருதுகின்றனா்.

இது டெமு ரயில் என்பதால் மானாமதுரையிலிருந்து மதுரை நோக்கி பயணிக்க இன்ஜின் மாற்றம் செய்யவும் தேவையில்லை. இந்த டெமு ரயிலில் கழிப்பறை வசதி உள்ளதால் பயணிகள் சிரமமின்றிப் பயணிக்கலாம்.

எனவே, புதுக்கோட்டைப் பயணிகளின் நலன் கருதி திருச்சி- மானாமதுரை டெமு ரயிலை மதுரை வரை நீடிக்க மதுரை கோட்ட மற்றும் தென்னக ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கான பரிந்துரைகளை புதுக்கோட்டையைச் சோ்ந்த எம்பிக்களும் உரிய பரிந்துரைகளை ரயில்வே துறைக்கு வழங்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருச்சி-மானாமதுரை டெமு ரயில் மதுரை வரை நீடித்தால் அதனுடைய அட்டவணை எப்படி இருக்கும் அல்லது இருக்கலாம் என்ற உத்தேச நேரம்.

மன்னார்குடி-திருச்சி ரயில் திருச்சி சந்திப்பிற்குள் வரும் நேரம் 09:10, காரைக்குடி-திருச்சி ரயில் திருச்சி சந்திப்பிற்குள் வரும் நேரம் காலை 09:10(இருப்பினும் 08:50-09:00 மணிக்கெல்லாம் திருச்சிக்குள் சென்றுவிடும்)

15 நிமிடங்கள் காத்திருப்பிருக்கு பின் 
திருச்சி-மானாமதுரை-மதுரை டெமு ரயில் 
திருச்சி-09:25 Dep  
புதுக்கோட்டை-10:20/10:22 X ing with 06888/VPT-TPJ Express 
காரைக்குடி- 11:02/11:05 
சிவகங்கை- 11:45/47 
மானாமதுரை-12:15/12:25(Cab Change)
மதுரை-13:30 Arrival 

மதுரை-மானாமதுரை-திருச்சி டெமு ரயில் 
மதுரை-13:45 Dep.
மானாமதுரை- 14:35/14:45(Cab Change)
சிவகங்கை - 15:13/15:15
காரைக்குடி- 15:50/15:53
புதுக்கோட்டை-16:32/16:33
வெள்ளனூர்- X ing with 06887/TPJ-VPT Express 
திருச்சி-17:50 Arrival 

இவ்வாறு இயக்கப்பட்டால் இது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெறக்கூடும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments