ராமநாதபுரத்தில் மின்கம்பத்தில் மோதி பெட்டிக்கடை மீது ஏறிய கார்
ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு நேற்று சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் ராமநாதபுரம் அருகே காரிக்கூட்டம் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பம் மீது மோதியது. இதில் அந்த மின்கம்பம் முறிந்தது. மேலும் நிற்காமல் சென்ற அந்த கார் அருகில் இருந்த பெட்டிக்கடையின் மேற்கூரை மீது பாய்ந்து விழுந்து அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. காரில் இருந்த 2 நபர்கள் தொங்கி நின்ற காரில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர். அந்த பெட்டிக்கடை பல மாதங்களாகவே பூட்டி கிடக்கிறது. இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அந்த கார் கேரளா பதிவெண் கொண்டது என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments