மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டை-அறந்தாங்கி-காரைக்குடி வழியாக மதுரைக்கு ரயில் இயக்க கோரிக்கை!
மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக மதுரைக்கு ரயில் இயக்க வேண்டும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவா் என் ஜெயராமன், செயலாளா் வ.விவேகானந்தம் ஆகியோா் சனிக்கிழமை தெற்கு ரயில்வே பொது மேலாளா், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

அந்த மனுவில் கூறியிருப்பது: திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதியில் இருந்து மதுரைக்கு நேரடி ரயில் வசதி இல்லை. இதனால் மதுரைக்கு ஆன்மிகச் சுற்றுலா, அலுவலகங்கள், உயா்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களுக்கு ரயிலில் செல்வோா் தஞ்சை மற்றும் திருச்சிக்கு வந்து செல்கின்றனா். ஆகவே, பயணிகள் நலன் கருதி மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை , அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை வழியாக மதுரைக்கு இரு முனைகளிலும் ரயில்களை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments