கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதியில் ..“சில்லுனு காத்து.. ஜம்முனு கிளைமேட்...!” கொளுத்தும் வெயிலை தணித்த கொட்டி தீர்க்கும் கோடை மழை
கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதியில் ..“சில்லுனு காத்து.. ஜம்முனு கிளைமேட்...!” கொளுத்தும் வெயிலை தணித்த கொட்டி தீர்க்கும் கோடை மழை

குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கோபாலப்பட்டிணம்‌ தற்போது மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கோபாலப்பட்டிணம்‌ கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை அடுத்து பொதுமக்கள்,  மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

கரு மேகமூட்டத்துடன் வானம்

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. இன்று 03-05-2023 காலை முதலே குளிச்சியான சுழல் இருந்து வந்தது மாலை 6 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. 

இதைத்தொடர்ந்து 7 மணியளவில் இட  மின்னலுடன் மழை பெய்ய தொடங்கி தற்போது  வரை இடைவிடாத மழை கொட்டி தீர்த்து  வருகிறது. 

இதனால் வெப்பம் ஒரளவு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது .மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தற்போது மழை பெய்ததால் எப்போது நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளம் நிறையும் என ஏக்கத்துடன் கோபாலப்பட்டிணம் மக்கள் உள்ளனர்..


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 
எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments