கே.புதுப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டி பார்வையாளர், மீமிசல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் உட்பட இருவர் உயிரிழப்பு


கே.புதுப்பட்டி அருகே மஞ்சு விரட்டு போட்டியில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே உள்ள கல்லூரில் மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் பார்வையாளர் கே.புதுப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மீது மாடு முட்டியதில் அவர் உயிரிழந்தார். மேலும், மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பிற்காக சென்ற மீமிசல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீத கிருஷ்ணன் மீதும் மாடு முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments