கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் பெய்து வரும் கோடை மழை
கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்    இடியுடன் கூடிய  மழை பெய்து வருகிறது 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள அறிக்கையில்

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும், வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6, 7-ந்தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெருவித்து இருந்தது 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்காளாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் மே 03 வரலாறு காணாத அளவுக்கு கோடை மழை பெய்தது இதனால் முக்கிய இடங்களில் குளங்கள் போன்று மழை நீர் தேங்கியது நீர் நிலைகள் நிரம்புகிறது 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் நே மாலை இன்று மே 04 வியாழக்கிழமை 7 மணியளவில்  திடீரென  வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து  8 மணியளவில் மழை பெய்ய தொடங்கி தற்போது வரை பெய்து வருகிறது 

இதனால் வெப்பம் ஒரளவு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது .

மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments