கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வில் 93.4 % தேர்ச்சி! வரலாறு பாடத்தில் சென்டம் அடித்த மாணவர்!!கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வில் 93.4 % தேர்ச்சி பெற்று, வரலாறு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு தேர்வு கடந்த ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றது. தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட  8.17 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். வினாத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10 முதல் 21 வரை நடைபெற்றது.  12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு மே 7-ம் தேதி நடந்ததால் மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டு மே 8-ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில். 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு இந்த ஆண்டு 46 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 43 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 93.4 சதவிகிதம் பெற்றுள்ளது. 

சரண்யா என்ற மாணவி 540 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், கானிதா என்ற மாணவி 532 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், விஷ்னு என்ற மாணவர் 521 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

மேலும் கவியரசன் என்ற மாணவர் வரலாறு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். ரிஸ்வானா பேகம் என்ற மாணவி வேதியியல் பாடத்தில் 99/100 மதிப்பெண்ணும், சரண்யா என்ற மாணவி உயிரியல் பாடத்தில் 99/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 

மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி அதில் 93.4 % சதவீதம் மாணவர்களை தேர்ச்சி பெற செய்த தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் GPM மீடியா சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வரக்கூடிய கல்வியாண்டில் இப்பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு GPM மீடியா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

முதல் மதிப்பெண் சரண்யா 540

இரண்டாவது மதிப்பெண் கானிதா 532

மூன்றாவது மதிப்பெண் விஷ்ணு 521


கவியரசன் (100/100) வரலாறு

ரிஸ்வானா பேகம் (99/100) வேதியியல்

சரண்யா 99/100 உயிரியல் (பள்ளி முதலிடம்)

ALL RESUTS

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments