நீடாமங்கலம் திருவாரூர் நாகப்பட்டினம் நாகூர் வழியாக தஞ்சாவூர் - காரைக்கால் இரட்டை ரயில் பாதை ஆய்வுக்கு அனுமதி ரயில் உபயோகிப்பாளர் சங்கம் நன்றி




திருவாரூர்,மே 8: மத்திய அரசின் 'கதி சக்தி' திட்டத் தின் கீழ் ரயில்வே வாரியம் தஞ்சை - திருவாரூர்- நாகப்பட்டினம் - மற்றும் காரைக்கால் ரயில் பாதையை இரட்டை வழி பாதையாக மாற்றும் ஆய்விற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபயோ கிப்போர் சங்க உறுப்பினர் வெங்கடேசன் கூறியதாவது:

காரைக்காலில் இருந்து  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை வழியாகவும் திருவாரூர், மயிலாடுதுறை வழியாகவும் அதிக அளவில் சரக்கு ரயில் இயக்கப்படுகின்றன. ஒரு வழிபாதையாக உள்ளதால் சரக்கு ரயில் இயக்கப்படும் போது பயணிகள் ரயில் ஆங்காங்கே நிறுத்த வேண்டிய சூழல் உள்ளது.

காரைக்கால்- திருவாரூர்- தஞ்சா வூர் இரட்டை வழி பாதையாக மாற்றம் பெற்றால் போக்குவரத்து எளிதாக்கப்படும் என்ற எண்ணத்தில் 
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்போர் சங்கம் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன 

இதையடுத்து கதிசக்தி திட்ட இயக்குனர் தீபக்சிங் கடந்த 4-ம் தேதி விடுதுள்ள செய்தி குறிப்பில் 

'தாம்பரம் - செங் கல்பட்டு 4வது பாதை, 

ஜோலார்பேட்டை- கோயமுத்தூர் 3 மற்றும் 4ம் பாதை, 

கோயமுத்தூர்- சூரனூர் 3 மற்றும் 4 ம் பாதை, 

அரக்கோணம் - ரேணிகுண்டா 3 மற்றும் 4ம் பாதை, 

தஞ்சாவூர் -திருவாரூர் -காரைக்கால் இரட்டை வழி பாதை உள்ளிட்ட மொத்தம் 576 கிலோமீட்டருக்கு ஆய்வு மேற்கொள்ளரூ.11.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது என தெரிவித்துள் ளார். 

இந்த ஆய்வு அறிக் கையை தெற்கு ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி அமைச்சரவை ஒப்புதலில்

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப்பணிகள் நிறைவடைவதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. 

இரட்டை வழி பாதை அமைக்கும் போதே அவை மின்மயமாக்கப்பட வேண்டும்.

இதன் வாயிலாக கூடுதல் ரயில்கள் தடையின்றி இயக்கவும் குறித்த நேரத் திற்குள் பயணத்தை முடிக்க வும் இயலும்.
 
திருவாரூர் நாகப்பட்டினம் காரைக்கால் வேளாங்கண்ணி போன்ற பகுதிகள் வளர்ச்சி பெற தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால், முதுநிலை இயக்கவி யல் மேலாளர் ஹரிகுமார், முதுநிலை வணிகமேலாளர் செந்தில்குமார், கோட்ட முதுநிலை பொறியாளர் (ஒருங்கிணைப்பு)திருமால், பொறியாளர் (கிழக்கு) ரவிக்குமார்  உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments