தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் ஆன்லைன் மூலம் வரி செலுத்தம் வசதி நாளை மே 10-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
ஊராட்சிகளில் ஆன்லைன் மூலம் வரி செலுத்த வசதி 10-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வரியினங்களை ஆன் லைன் மூலம் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது. அதுபோல் கிராம ஊராட்சிகளிலும் ஆன்லைன் மூலமாக வரி வசூல் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. ஊராட்சிகளில் ரசீது புத்தகம் மூலமாக பணத்தை ரொக்க மாக செலுத்தி வரி வசூல் நடக்கிறது. கொஞ்சம் வளர்ச்சி பெற்ற ஊராட்சிகளில் மட்டும் கணினி மூலமாக ரசீது வழங் கப்படுகிறது. வரி வருவாயை வங்கி கணக்கு மூலமாககையாள வசதியாக ஆன்லைன் மூலமாக வரி வசூல் நடைமுறை நடப்பு நிதியாண்டில் நடைமுறைக்கு வர உள்ளது.

 வருகிற 10-ந் தேதி முதல் ஆன்லைன் வரி வசூல் நடைமுறைக்கு வருகிறது. அதற்காக ‘VP TAX' என்ற இணையதள வசதி அறிமுகம் செய் யப்பட்டுள்ளது. இதில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, வர்த் தக உரிமம், இதர வரியினம் இடம்பெற்றுள்ளன. இந்த இணை யதளத்தில் சொத்துவரி கணக்கீடு, உரிமையாளர் செலுத்த வேண்டிய நிலுவை தொகை, உடனடியாக வரி செலுத்தும் வசதி, வரி செலுத்திய விவரம் ஆகியவற்றை தனித்தனியாக பார்க்கலாம். மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி, வரி விதிப்பு எண், செல் போன் எண் ஆகியவற்றை பதிவு செய்து, செலுத்த வேண்டிய வரியை ஆன்லைன் மூலமாக செலுத்த முடியும். அதற்கான ரசீதையும் பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments