மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்.புதுப்பட்டிணத்தில் ஆழ்குழாய் கிணறுக்கு சமாதி கட்டும் போராட்டம்.!நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்.புதுப்பட்டிணத்தில் ஆழ்குழாய் கிணறுக்கு சமாதி கட்டும் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மீமிசல் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டிணம் முஸ்லிம் தெருவில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யாமல் தொடர்ந்து அலட்சியமாகவும், மெத்தனபோக்காக செயல்பட்டு வரும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகிற 16/05/2023 அன்று காலை 10 மணி அளவில் ஆழ்குழாய் கிணறுக்கு (போர்வெல்) சமாதிக்கட்டும் போராட்டம் ஆர்.புதுப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு தருமாறு மீமிசல் காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கடிதம் வழங்கப்பட்டது.

தகவல்: S.அஜ்மல் கான், மாவட்ட துணைச்செயலாளர், மனித நேய மக்கள் கட்சி, புதுக்கோட்டை கிழக்கு, செல்: 99420 02536


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments