அரிமளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் 47 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது




அரிமளம் அருகே 47 ஆண்டுகளுக்கு பிறகு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நெடுங்குடி கிராமத்தார்கள் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் 47 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 40 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவாக நடத்தப்பட்டது.

பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள், 2-ம் பரிசு ஈழக்குடிப்பட்டி யாழினி பெரிய கருப்பன், 3-ம் பரிசு அறந்தாங்கி ஆசிக், 4-ம் பரிசு தல்லாம்பட்டி மங்கையர்கரசி ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

பரிசு

தொடர்ந்து சிறிய மாடு பிரிவில் 30 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட பந்தயமானது 2 பிரிவாக நடத்தப்பட்டது. இதில் பந்தய தூரமானது போய்வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை பரலி செல்வி, கோ.வேலங்குடி சுந்தர கருப்பன், 2-ம் பரிசு கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள், பள்ளத்தூர் ஹரிகிருஷ்ணன், 3-ம் பரிசு புனவாசல் வேம்பையன், கருவிடைச்சேரி சாத்தையா, 4-ம் பரிசு நெடுங்குடி பெருமாள், பேராவூரணி கழனிவாசல் லிங்கேஷ் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற நெடுங்குடி, கீழாநிலைக்கோட்டை, கல்லூர் சாலை இருபுறமும் திரளான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments