திருவாடனை - ஏம்பல் நகரப் பேருந்து சேவை தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஏம்பல் கண்ணங்குடி வட்டார மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான திருவாடனை - ஏம்பல் பேருந்து வழித்தடம் ஒதுக்கப்பட்டு, அதன் இயக்கம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

ஏம்பல் வட்டார வளா்ச்சிக் குழுவின் முயற்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினா் கரு. மாணிக்கம் வலியுறுத்தலின்பேரில் இந்தப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. திருவாடனை பேருந்து நிலையத்தில் புதன்கிழமை முதல் பேருந்து இயக்கி வைக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் கரு. மாணிக்கம் இப்பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வயலாங்குடி, விசூா் கிராமங்கள், நாட்டின் விடுதலைக்குப் பிறகு முதல் முறையாக போக்குவரத்து வசதி பெறுவதாக ஏம்பல் வட்டார வளா்ச்சிக் குழுவினா் தெரிவித்தனா்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments