ஆவுடையார்கோவில் ஒன்றிய குழுக்கூட்டம்
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய குழுத்தலைவர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில், துணைத்தலைவர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அலுவலர் முருகையா தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் எந்த ஒரு சாலையையும் மேம்பாடு செய்யாத நெடுஞ்சாலைத்துறை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டரை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, புண்ணியவயல் ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தில்குமரன் பேசும்போது, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நெடுஞ்சாலைதுறை மூலம் கிராம சாலைகள் திட்டம் செயல்படுத்தவில்லை என்றார். பொன்பேத்தி கவுன்சிலர் சுந்தரபாண்டியன் இப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் நிற்கிறது என்றார். அதற்கு கரூர் மின்வாரிய அதிகாரி பதிலளித்து பேசும்போது, அமரடக்கி துணை மின்நிலையத்தின் அருகே மின்வாரிய ஊழியர்கள் வீடு கட்டி குடியேறிய பிறகுதான் மின்வினியோகம் சரிசெய்ய முடியும் என்று தெரிவித்தார். மீமிசல் கவுன்சிலர் அய்யரமேஷ் சாலை வசதி ஏற்படுத்தி தந்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments