டெல்லி - டேராடூன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்




டெல்லி – டேராடூன் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு தற்போது சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதன் பயண நேரம் 6 மணி மற்றும் 10 நிமிடமாக உள்ளது. இந்நிலையில் இப்பயண நேரத்தை 4.30 மணி நேரமாக குறைக்கும் வகையில், அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும்.

இதனை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். மேலும் உத்தராகண்டில் ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டதையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடிபேசியதாவது: உலக சுற்றுலாப் பயணிகள் இந்தியாவைப் பார்க்கவும் இந்தியாவை புரிந்துகொள்ளவும் இங்கு வர விரும்புகின்றனர். இம்மாநிலத்திற்கு இது சிறந்த வாய்ப்பாகும்.


மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்றுதான் டெல்லி திரும்பினேன். முழு உலகமும் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதிலும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திய விதத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன.

உத்தராகண்டில் பல்வேறு பகுதிகள் இடையே இணைப்பை மேம்படுத்தும் வகையில் பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசால் பல்வேறு சாலை மற்றும் ரயில்திட்டங்கள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. கேதார்நாத், பத்ரிநாத்புனரமைப்புத் திட்டங்கள் மூலம்சார்தாம் யாத்ரீகர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் சுகாதார உட்கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதர் மோடி பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசும்போது, டேராடூன், டெல்லி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments